அரை வட்டம் |
முழுமதிப்பெண் கிடைத்தது |
பரிட்சை பேப்பரில் |
தரிசு நிலத்தைப் பார்த்து |
ஓயாமல் கத்துகிறது |
கறவை மாடு |
துரோகியின் மரணம் |
புண்ணியத்தை தேடிக் கொண்டது |
சவப்பெட்டி |
நடந்து முடிந்த இரவு |
சுத்தம் செய்கிறது |
காலைப் பனித்துளி |
தலைமுழுகிய பின்பும் |
துவட்டிவிட்டுச் செல்கிறது |
சில நீர்த்துளிகள் |
அகலப் பாதை |
குறுக்குவழியில் சென்றது |
மேச்சல் ஆடு |
இந்தியாவின் முதுகெலும்பு |
செயலிழந்து கொண்டிருக்கிறது |
ஜந்தர் மந்தர் |
கோடை வெயில் |
குளிர்ச்சியாகவே இருக்கிறது |
கோயில் சிலைகள் |
ஜூன் 2017 தமிழ்நெஞ்சம் மாத இதழில் எனது ஹைக்கூ
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...