கவிச்சூரியன் மின்னிதழ் பிப் 2018

புத்தனை போலவே 
தியானத்தில் இருக்கிறது 
நூலகத்தில் புத்தகங்கள் 
ராப்பிச்சை 
ஒளிவீசுகிறது 
தட்டில் நிலா 
ஆடி பெருக்கு 
அடி பம்பிற்கு பூஜை போட்டால் 
அம்மா 
உயர்ந்த வானம் 
தரையிறங்கியதும் விஷமானது 
மண்வாசனை 

உயிர்த்திசை

Related image

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் 
விடியலை தந்தவள் நீயல்லவோ  தாயே 
படைத்தவன் துணையில் எனை வளர்க்க 
பத்துப்பாத்திரம் துலக்கி கரை சேர்த்தாயே 
உடுத்தும் ஆடை அழகினிலே உன் 
உதிரத்தை மறைத்து வைத்தாயே நான் 
படுத்தும் பாட்டை பொருத்தருளி உன் 
பாதி தூக்கத்தில் அழுது துடித்தாயே 
ஊரார் என்னை கடிந்துகொண்டால் உன் 
உயிர்த்திசை நோக துடித்தாயே இவ் 
உலகத்தில் நானும் வலம் வரவே உன் 
உயிர் மூச்சை பரிசாய் கொடுத்தாயே 
எதை நான் கொடுத்து மீட்டிடுவேன் உன் 
எல்லையில்லா தியாகத்தை என்ற  
எண்ணத்திலே நானும் உயிர் பிழைத்திருக்க உன்
ஜெனனம் கொடுத்து மகிழ்விப்பாயா 
பாலும் தேனும் கலந்தூட்டி என் 
பாவக் கணக்கை முடித்துக்கொள்ள 
பாவி நானும் துடிக்கின்றேன் உன் 
பார்வை இன்றி தவிக்கின்றேன் தாயே !

கொலுசு - மார்ச் - 2018

பூ போட்டுப் பார்க்கிறேன் 
மண் விழுந்தது
மூடநம்பிக்கையில்

கவிச்சூரியன் மின்னிதழ் ஜனவரி -2018

விரிசல் பட்ட நிலத்தில்
ஊா்ந்து வருகிறது
எறும்பு படை
மங்கள வாத்தியம் முழங்க 
உடன் கட்டை ஏறுகிறது 
முதல் காதல் 
மார்கழி பிள்ளையார் 
கையில் கிண்ணத்துடன்
சிறுவா் கூட்டம்
இராவணணின் கூட்டில்
பத்திரமாக இருந்தது
சீதையின் கற்பு
நடுகடல்
சுனாமி அலை
பாவம் என் மீன்குஞ்சுகள்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 50

நான் 
உனக்கு மனைவியாக விரும்புகிறேன்
நீ
உன் ஜாதிக்கான
மனைவியை தேடுகிறாய் !

mhishavideo - 145