சிறுகதை - களைகள் !



இளவரசி மிகவும் சாதுவானவள் எவருக்கும் துன்பம் என்றால் ஒடிப்போய் உதவுவதில் கெட்டிக்காரி ஒரு நாள் தன்னுடன் பணியாற்றும் தோழிக்கு பணம் தேவை பட்டது உடனே இளவரசி தனக்கு தெரிந்தவர்கள் மூலம் வட்டிக்கு கொஞ்சம் பணத்தை வாங்கிக் கொடுத்தாள் 
சில நாட்கள் சென்றது கொடுத்த கடனை திருப்பிக் கேட்டாள் 
ஆனால் அந்த தோழியோ பணத்தை இப்போது திருப்பி தரமுடியாது கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றாள் உடனே இளவரசி சரி என்று ஒரு வருட காலம் காத்திருந்தாள் பணம் கிடைக்கவில்லை 
என்ன செய்வது கொடுத்தவர் கடனைக்கேட்க தன் பணத்தைக் கொடுத்து அந்தக் கடனை அடைத்தாள் 
ஓரிரு மாதம் ஆனது அதே தோழிக்கு பணம் தேவைப்பட்டது அந்த வழியாக வந்த இளவரசியின் தாத்தா என்னமா இந்தப்பக்கம் என்றார் 
அதற்கு அவள் என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை மருத்துவமனையில் சேர்த்துள்ளேன் அறுவை சிகிச்சை செய்வதற்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது அதனால் தான் அங்கும் இங்குமாக வட்டிக்கு பணம் கேட்டு அலைகிறேன் கிடைக்கவில்லை தாத்தா என்றதும் 
சரிமா நான் வாறேன் முடிஞ்சா நானும் உதவி பண்ண முயற்சிக்குறேன் என்றவாறு சென்றார் தாத்தா  
வீட்டிற்கு சென்றதும் இளவரசியிடம் நடந்ததை சொன்னார் தாத்தா 
உடனே இளவரசி தாத்தா அவளுக்கு உதவுவது தவறு நான் கொடுத்த பணத்தை கேட்டப் போது வாங்கும் போது நன்றாக இருக்குமாம் கொடுக்கும் போது யாருமே நல்ல எண்ணத்துடன் கொடுக்க மாட்டார்களாம் என்று கூறினாள். அதைகேட்டு எனக்கு வருத்தமாக இருந்தது. அன்று மட்டும் சரியான நேரத்தில் நான் உதவவில்லை என்றால் அவளின் அக்கா திருமணம்
நடந்திருக்குமா? அன்றையில் இருந்து இனிமேல் யாருக்கும் பண உதவி செய்யக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். அடிக்கடி கூறுவீர்களே விதைத்தது தான் மூளைக்கும் என்று அதுதான் என் தோழியின் விசயத்தில் நடந்துள்ளது என்றாள்     
நீ கூறுவது தவறு இளவரசி ஒரு விவசாயி வருடம் தோறும் விதவிதமாக காலத்திற்கு ஏற்ப விதைக்கிறான் அவன் விதைக்காமலே விளைவது களை அந்த களையை பிடிங்கி போட்டுவிட்டு தொடர்ந்து தனது விவசாயத்தை செய்து வெற்றி காண்கிறான் அதே போல் தான் நாம் உதவி செய்யும் போதும் சில களைகள் கூடவே இருக்கத்தான் செய்யும் அதை பிடிங்கி எறிந்துவிட்டு நம் பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும் அப்போது தான் பிறவி பயன் முற்றுப் பெரும் என்றார் தாத்தா
சரிங்க தாத்தா நான் இப்போது சென்று அவளுக்கு தேவையான பணத்தை கடனுக்கு வாங்கி அவளிடம் கொடுத்துவிட்டு வருகிறேன் என்று கிளம்பினாள் ....
தோழியோ ரோசியோ அப்பணத்தை வாங்க மறுத்தாள் அப்போது இளவரசி கூறியது 
" மாதம் முழுவதும் உழைத்தப் பணத்தில் ஒரு பங்கு சந்தோசமாக  கடவுளுக்கு கொடுக்கிறோம் காரணம் நடந்ததற்கு நன்றி கூறி இனி நடக்கப்போவதற்கும் சேர்த்து கடவுள் நம்மை காத்தருள்வார் என்று தானே "
அதே போல் நம் கஷ்டத்தில் கடவுள் நேரில் வரமாட்டார் நம்மை போன்றவர்கள் உருவத்தில் தான் வருவார் அப்போது தனக்கு உதவி செய்யும் நபருக்கு அதைவிட இருமடங்கு வட்டி கொடுப்பதில் தவறில்லை அதை விட்டுவிட்டு வயிறேரிந்து கொடுத்தால் நாம் எதற்காக வாங்கினமோ அதற்கான பலன் தவறாகிவிடும் என்பதை உணர்ந்துகொள் "  நாளை வந்து அம்மாவை பார்க்கிறேன் தைரியமாக இரு என்று இளவரசி சென்றாள். 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145