ஹிஷாலியின் ஹைக்கூ - கீழ்வானம் ...!





 வறுமையின் நிறம் சிவப்பு 

உணர்த்தியது 

கீழ்வானம் ...!

விஜயின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் - 22.06.2014




நாற்காலியை விரும்பாத 
நட்சத்திரத்தின் தலைவா - நீ 
நாளை தீர்ப்பில் விழுந்து 
மாண்பு மிகு மாணவனாய் எழுந்தய்  - பின் 

காதலுக்கு மரியாதை தந்து 
கில்லியா எகிறிக் குதித்து 
துள்ளாத மனதையும் துள்ளவைத்த 
துப்பாக்கியின் வேட்டைக்காரனே - நீயே 
அழகிய தமிழ் மகன் அன்பின் காவலன் 
திருப்பாச்சி முதல் சிவகாசி வரை 
செந்தூரம் வீசிய மதுர ஜில்லாவின் நண்பனே 
குஷியான ரசிகர்களுக்கு
ருசியான  ஜாஜஹான் நீ 
நேருக்கு நேர் நின்று போரிடா
புதிய கீதையே  இன்று 

கத்தி முனையில் நின்றாலும் 
வெற்றி முனையை
பறந்தடிக்கும் குருவியே

போக்கிரியே பொறுமையும்
இளமையும் கொண்ட பத்ரியே
பாட்டுடன் கலந்த வசீகரனே  

பார் போற்றும் பல கோடி மக்களின் 
பகவதியே தல தளபதியே
வாழ்க பல்லாண்டு வளர்க திரையாண்டு 


பாக்யா வார இதழ் - ஜூன் 20-26 - 2014

உலர்ந்த கண்களோடு
மலர்ந்த பூக்களை விற்கிறேன் 
வறண்ட நாவிற்கு
ஒரு பிடி அரிசி கிடைக்காதா என்று
அறுந்த செருப்போடு
அறுந்து வரும் செருப்புகளைத்தைக்கிறேன்
இருண்ட குடிசைக்கு
ஒரு வாசல் கிடைக்காதா என்று
கிழிந்த புடவையும் 
மலிந்த முகமுமாய் 
வாகனத்தைத் தேடுகிறேன்
தகனம் செய்யும் தருணத்தில் வாய்க்கரிசிக்கு
ஒரு வழி கிடைக்காதா என்று
ஏதும் படிக்கவில்லை
அடையாளம் காட்டுகிறேன்
பழகிய தெருக்களில்
ஒரு வேளை பழைய சோறு கிடைக்காதா என்று
ஊனத்துடன் உழைப்பைக் 
கூட்டுகிறேன்
சலிப்பின் வியர்வை
ஒரு நாள் பிழைப்பை கெடுத்துவிடக் கூடாதென்று 
ஒண்டக் குடிசையில்லை
ஒய்யாரக் கூடத்தில்
கலவை சுமக்கிறேன்
பண்ட பாத்திரங்கள் எல்லாம்
ஒரு பாட்டில் மதுவிற்குள் மூழ்கிவிடக்கூடதென்று..!

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ்.எண் 18

உலக வறட்சி தினம் 
வாழ்த்தியது 
முத்த மழை ...!
உலக காற்று தினம் 
கை குலுக்கியது 
மரங்கள் ...!
உலக அகதிகள் தினம் 
மௌனமானது 
மெழுகுவர்த்தி ...!

பந்தம் ...!



எத்தனை முறை 

கேட்டாலும் 

ஒரே முறை தான் 

கருமு(வ)றை ...!

என் பயணம் !




நேசிக்க யோசிக்க 
ஆயிரம் வழிகள் 
இருந்தாலும் ...

ஆயிரம் ஆசிகளுடன் 
முதல் வழி  பாதையிலே 
என் பயணம் !

ஹிஷாலியின் ஹைக்கூ

வியர்வை துளியில் 
விளைகிறது 
மழலைப்  பயிர்கள் ...!
இறவா சங்கத்தில் 
பிறவா குழந்தை 
கண்ணதாசன் ...!
கடல் தரித்த வானில் 
மடல் வரையும் 
மக்கள் ...!
நிலாச் சோற்றில் 
உலாவரும் 
ஏழைகள் ...! 

நினைவுகள் முன்னாடி ...!



அவளின் பிரிவு 

நரகம் தான் 

சொர்கமான 

நினைவுகள் முன்னாடி ...!

கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து



மேகம் கருத்தால் மழை நிதி 

மோதல் படர்ந்தால் துயர் நிதி  

தாகம் நீண்டால் உயிர் நிதி 

தன்னடக்கம் கொண்டால் தலைவன் நிதி 

சோகம் மறைந்தால் இன்ப நிதி 

சொகுசாய் வாழ்ந்தால் நூறு நிதி 

வீரம் கொடுத்தால் வெற்றி நிதி 

விவேகம் சாயிந்தால் தோல்வி நிதி  

விட்டுக் கொடுத்தால் கெடா நிதி 

வாரி வழங்கினால் வள்ளல் நிதி 

வயதை கடந்தால் யோக நிதி 

ஆட்சியை ஆண்டால் கொடை நிதி 

ஆசை புரண்டால் அழிவு நிதி 

கல்வி கடந்தால் அறிவு நிதி 

காதல் வென்றால் மண நிதி 

பசியை மறைத்தால் கடவுள் நிதி 

பணத்தை இழந்தால் பைத்திய நிதி 

புண்ணியம் செய்தால் மோட்ச நிதி 

புலமை பெற்றால்  கவி நிதி 

இப்படி எல்லா நிதியும் கடந்து 

செம்மொழி வளர்த்த கருணா நிதியே  

இவ்வையகம் போற்ற நீர் வாழ்க பல்லாண்டு 

வளர்க நூறாண்டு ...!

mhishavideo - 145