உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!






விதையைப் பெருக்கி 

மழையால் வகுத்தால் 

கடன் தான் ஈவானது ...!


களையைக் கழித்து 

செலவைக் கூட்டினால் 

வியர்வை தான் ஈவானது ...!


அறுவைக்கு கடன்வாங்கி 

அதிக வட்டி குட்டி போட்டால் 

நட்டம் தான் ஈவானது ...!


மின்சாராம் இலவசம் 

சம்சாரம் தாலி அடகில் 

மீட்ப்புத் தொகை தான் ஈவானது ...!


ஆஹா என்ன விளைச்சல் 

அதற்குள் அழித்தது புயல் 

நிவாரணம் தான் ஈவானது ...!


மீந்த ஈவில் மனப்பதோ 

செய்முறை அதில்  

உழவையும் கலவையும்  

தான் தள்ளுபடியானது...!


பாலாய் போன மண்ணில் 

விதைத்து விதைத்து 

எலும்பானான்   

வியர்வை நிலத்தில் 

கருப்பானான்


உயிரை மட்டும் பயிராக்க 

உழுத நிலத்தைப்   

பணமாக்கிவிட்டான்...! 



2 comments:

  1. //உயிரை மட்டும் பயிராக்க
    உழுத நிலத்தைப்
    பணமாக்கிவிட்டான்...! //

    எல்லாம் ஈவான, ஈவு இரக்கமற்ற கவிதை.

    படிக்க மனம் வேதனைப்படுகிறது.

    சிறப்பான சிந்தனையுடன் கூடிய ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா இன்றைய சூழலும் இது தான் தாங்கள் ஆக்கபூர்வமான கருத்திற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145