கேள்வி அறியா தேடல் ...!



கேள்விகள் தெரியாமலே 
விடையைத் தேடும் மனிதா !

உடையில் மாற்றம் கண்டாய் 
உணவில் மாற்றம் கண்டாய் 
பிறப்பில் மாற்றம் கண்டாய் 
இறப்பில் மாற்றம் கண்டாய் 

உழைப்பை மட்டும் நம்பாமல் 
ஊழலில் மாற்றம் கண்டதால் 
தேர்தல் களம் தேவைக் களமானது 
தேர்வுக் களம் போர்வைக் களமானது 

கெஞ்சல் கேலிகள் எல்லாம் 
கொஞ்சல் செய்தியானது 
கோடானக் கோடி
மக்கள் பார்வையில் - அது மட்டுமா ?

அஞ்சல் வழியில் ஆயிரம் கோடி 
அவரவர் வேளையில் லட்சம் கோடி  
இங்கே விடியலும் மாறுவதில்லை 
ஏழைக் குடிசையும் ஒய்வதில்லை 

வாழையடி வாழையாய்
வளர்கிறது வறுமை
இதை வாடா என்று அழைக்குது
நாளையக் கொடுமை

ஓடாய் தேய்ந்தாலும்
நாடாய் மாறாமல் 
நாமும் மாறமாட்டோம்
நல் வழி சேர மாட்டோம் !



4 comments:

  1. அருமையான சிந்தனை வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. யோசிக்க வேண்டிய வரிகள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆம் அண்ணா அன்பு நன்றிகள் பல

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145