சென்ரியுவாய்த் திருக்குறள்-146-150


குறள் 146:
பகைபாவம் அச்சம் பழியென நான்கும் 
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

நான்கு மனையை தேடினால் 
நான்கு பாவங்கள் 
துணைவரும் 

குறள் 147:
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் 
பெண்மை நயவா தவன்.

மனைவிக்கு துரோகம் 
என்னாதவன் 
பெண்மையின் அண்ணன் 

குறள் 148:
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு 
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

பிறப் மனைவியை 
தாய் போல் போற்றுபவன் 
கடவுளுக்கு சமம் 

குறள் 149:
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் 
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

வேற்று பெண்ணை தீண்டாதவன் 
கடல் சூழ்ந்த உலகத்தின் 
கலங்கரை விளக்கு 

குறள் 150:
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் 
பெண்மை நயவாமை நன்று.

ஆயிரம் பாவங்களையும் 
புண்ணியமாக்கும் 
ஒரே மனைவியின் ஆசை 



No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145