சென்ரியுவாய்த் திருக்குறள் - 121-130


ஹிஷாலியின் திருக்குறள் சென்றியுக்கள்: 

குறள் 121:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 
ஆரிருள் உய்த்து விடும்.

இன்றைய அடக்கம் 
நாளைய சொர்க்கம் 
தேவலோகத்தில் 

குறள் 122:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் 
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

அழகை விட 
அடக்கமே 
சிறந்த செல்வம் 

குறள் 123 :
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து 
ஆற்றின் அடங்கப் பெறின்.

அறிவும் அடக்கமும் 
பின்னி பிணைந்திருந்தால் 
உலகமே பாராட்டும் 

குறள் 124:
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
மலையினும் மாணப் பெரிது.

பெண்ணின் ஒழுக்கம் 
ஆணின் நேர்மை 
மலையை விட பெரியது

குறள் 125:
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

நாட்டின் உயர்ந்த செல்வம் 
அரசனின் 
செருக்கற்ற அடக்கம் 

குறள் 126:
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் 
எழுநம்யும் ஏமாப் புடைத்து.

ஆமை போல் 
அடங்கி ஒடுங்கி வாழ்தல் 
ஏழு ஜென்மத்திற்கு அரண்

குறள் 127:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

உளராத நாக்கு 
நாளைய 
உலகையே வாங்கும் 

குறள் 128:
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் 
நன்றாகா தாகி விடும்.

பால் மானம் 
சிறு நஞ்சு சொல் 
தீய உறவாகிவிடும்  

குறள் 129:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
நாவினாற் சுட்ட வடு.

உடல் காயம் ஆறிவிடும் 
சொல் காயம் 
புற்றுநோயாய் மாறிவிடும் 

குறள் 130:
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி 
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

சீரும் பாம்பாய் இல்லாமல் 
சிரிக்கும் குழந்தையாய் வாழ்ந்தால் 
நல்லறம் நுழைந்திருக்கும் 

2 comments:

  1. அருமையா இருக்கு! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. மிக்க நன்றிகள் அண்ணா

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145