தன்முனைக் கவிதைகள் நானிலு

மரணத்தை விட 
கொடுமையானது 
மனதில் உன்னை 
உயிரோடு 
பூட்டி வைப்பது

தன்முனைக் கவிதைகள் நானிலு

உன் உதட்டு 
சாயத்தில் ஒளிந்திருக்கு
எனக்கான
பாதரசம்

தன்முனைக் கவிதைகள் நானிலு

எத்தனை முறை 
தூக்கி எறிந்தாலும் 
அளவு குறைவதே இல்லை 
உண்மை காதலுக்கு

தன்முனைக் கவிதைகள் நானிலு

உன்னை 
நேசித்த பிறகு தான் 
தெரிந்தது என்னை நேசித்த 
இதயங்களின் வலி

தன்முனைக் கவிதைகள் நானிலு

யார் ஒட்டுக்கேட்டாலும் 
நிறுத்தப் போவதில்லை 
கதை பேசும் 
நம் கைபேசி

தன்முனைக் கவிதைகள் நானிலு

நீ 
துரத்திவிட்ட 
நாட்களையெல்லாம் 
சுமந்து செல்கிறேன் 
நான்

தன்முனைக் கவிதைகள் நானிலு

நான் வைத்த மல்லிகை செடியில் 
ரோஜாவின் வாசம் 
பறிக்க நினைத்தேன் 
மரித்து உதிர்ந்தது சருகாய்

தன்முனைக் கவிதைகள் நானிலு

மரணத்தை விட  கொடுமையானது  மனதில் உன்னை  உயிரோடு  பூட்டி வைப்பது